Sunday, December 31, 2006

உயிர் வாழ உதவி வேண்டி - 2

அன்பான நண்பர்களே,

சிரமம் பார்க்காமல் இந்தப் பதிவை வாசித்து விடும்படி ஒரு அன்பான வேண்டுகோளுடன்,

இரு மாதங்களுக்கு முன் குழந்தை ஸ்வேதாவின் மருத்துவ உதவிக்காக சிங்கை நண்பர் அன்பு, என் வலைப்பதிவு வாயிலாக முன் வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, பல நண்பர்கள் பொருளுதவி செய்தனர். கிட்டத்தட்ட 40000 ரூபாயை சேகரித்து, மருத்துவமனைக்கு அனுப்ப முடிந்தது.

பார்க்க: http://balaji_ammu.blogspot.com/2006/11/blog-post_04.html

ஸ்வேதாவுக்கு நல்ல விதமாக இதய அறுவை சிகிச்சையும் நடைபெற்று, தற்போது நலத்துடன் இருக்கிறாள்.

பார்க்க: http://balaji_ammu.blogspot.com/2006/12/blog-post_17.html

ஒரு வாரம் முன்பு, ஸ்வேதாவின் வீட்டுக்குச் சென்று அவளை பார்த்து விட்டு வந்தேன். சக வலைப்பதிவர்களான சங்கரையும், மதுமிதாவையும் உடன் அழைத்துச் சென்றிருந்தேன். எல்லாம் நல்லபடியாக முடிந்து குழந்தை நலம் பெற்றதில், அவள் பெற்றோருக்கு அளவில்லா மகிழ்ச்சியும், எங்களுக்கும் மிகுந்த மனநிறைவும் ! இனிமையான சந்திப்பும் கூட. ஸ்வேதா எங்களை டாக்டர்கள் என்று நினைத்து முதலில் மிரண்டு எங்கள் கிட்டேயே வர மறுத்தாள் ! பின், பயம் விலகி, சற்று சிரிக்கவும், கிளம்பும் சமயம் டாட்டாவும் காட்டினாள் :)

இரு வாரங்களுக்கு முன், நண்பர்கள் ரஜினி ராம்கி மற்றும் சங்கர் மூலமாக இன்னொரு பிஞ்சுக் குழந்தைக்கு (லோகப்பிரியா) மருத்துவ உதவி தேவைப்படுவதாக செய்தி வந்தது. ராம்கி தனது ரஜினி ரசிகர்கள் சங்கம் மூலம் 12000 ரூபாய் கலெக்ட் செய்துள்ளதாகக் கூறினார். சங்கர், லோகப்பிரியாவின் தந்தையை சந்தித்து விவரங்களைக் கேட்டு எனக்கு அனுப்பிய மடலையும், ராம்கியின் மடலையும், உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். குழந்தைக்கு ஒரு மாதத்திற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

********************************
அன்புள்ள பாலாஜி

இதனுடன் குழந்தை லோகப்ரியாவின்(5 Month's old) மருத்துவ உதவிக்காக இருதய நிபுணர் டாக்டர் . M.S.ரஞ்சித் கொடுத்துள்ள கடிதத்தை இணைத்துள்ளேன்.

குழந்தை இப்போது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ளது. அங்கு தேவையான உபகரணங்கள் இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையை ராமச்சந்திராவில் காட்டும் படி பரிந்துரைத்துள்ளனர்.
இம் குழந்தையின் தந்தை போன வார இறுதியில் என்னை வந்து சந்தித்தார்.
குழந்தை லோகப்ரியாவின் தந்தை திரு.அருள் மீன்பாடி வண்டி எனப்படும் ட்ரை சைக்கிள் ஓட்டுகிறார்.தாயார் ஒரு வீட்டில் வீடு பெறுக்கும் வேலை செய்கிறார்.இப்போது குழந்தையின் உடல்நிலை காரணமாக அதுவும் போக முடியவில்லை.

இவர்கள் வசிப்பது எனது வீட்டிற்கு அருகில் உள்ள குடிசைப் பகுதியில்
இவர்களது முதல் ஆண் குழந்தையும் 2 ஆண்டுகளுக்கு முன் இதே போல் இதய வியாதியால் இறந்து விட்டது..சரியான டையக்னாஸிஸ் மற்றும் சிகிச்சையின்றி...கொடுமை என்னவென்றால் என்ன வியாதி என்றே இவர்களிடம் சொல்லப் படவில்லை.ஹெரிடிடரி என்றும் விளக்கவில்லை...இது தெரியாத அறியாமையால் இரண்டாவது குழந்தையும் பெற்று அதுவும் அதே நோயால் அவதியுரும் நிலை எந்த பெற்றோருக்கும் வர வேண்டாம்அப்போதே சொல்லியிருந்தால் இரண்டாவதாக குழந்தை பெற்றே இருக்க மாட்டோம் என இப்போது கதறுகிறார்கள்.

அறியாமையால் உதவுவதற்கு யாருமின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை கஷ்டப்பட்டு ரூ.20,000/- சேகரித்துள்ளனர்( அவர்கள் குடிசைப் பகுதியில் உள்ள அனைத்து கூலி வேலை/வீட்டு வேலை செய்யும் மக்கள் 50, 100 என உதவி செய்து இந்த தொகையை கொடுத்துள்ளனர்
எங்கள் தெருவில் உள்ள தெலுங்கு டைரக்டர்,தயாரிப்பாளர் மாருதி ராவ் ரூ.10,000/- உதவி செய்துள்ளார்

ஆக மொத்தம் ரூ 30,000/- சேர்ந்துள்ளது...மேலும் 100000 தேவை இதில் பெரும் பகுதி சேர்ந்து விட்டால் கூட அறுவை சிகிச்சை செய்து தர டாக்டர் சம்மதித்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்காக ஜனவரி-27 என நாள் குறித்திருக்கிறது...இருந்தாலும் பணம் சேர்ந்து விட்டால் முன்னமே செய்து விடுவார்கள்.

அன்புடன்...ச.சங்கர்
*****************************

Here is one Medical Request. Baby. Loga Priya aged 3 months, admitted in Shri Ramachandra Hospital, Porur, suffering from Congenital Hear Disease and she has to undergo Open Heart SErgety which will cost around 1.25 lakhs and the same has to be done by January 2007. I've verified the same request and it's a genuine one, family is a lower middle class and father is a technician.

Name of the Patient : Baby. Loga Priya
Ref. No. 0951431
Consultant : Dr. M.S. Ranjit,
Professor Paediatric Cardilology,
Sri Ramachandra Hospital.
Contact No. 24768403 Ext. 450 & 464
E-Mail : ranjitmadathil@yahoo.com

* Any amount can be made but it should reach on or before 27.1.2007

Thanks & Regards,
Ramki
************************

தங்களால் இயன்ற உதவியை, அது எவ்வளவு சிறியதாக இருப்பினும், செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறேன். உதவி செய்வதற்கு, கீழ்க்கண்ட மின் மடல் முகவரிகளில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

rajni_ramki@yahoo.com
sankar.saptharishi@gmail.com
balaji_ammu@yahoo.com

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 275 ***

27 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

ramachandranusha(உஷா) said...

test :-)

enRenRum-anbudan.BALA said...

Usha,

Thanks :)

Friends,
Pl. stamp as much "+" as possible so that many could read this posting and take a decision to help !

ச.சங்கர் said...

நன்றி பாலாஜி, புது வருடத்தில் குழந்தை லோகப்ரியாவுக்கும் புது வாழ்வு மலரும் என நம்பிக்கையுடன்

enRenRum-anbudan.BALA said...

Thanks, Sankar !

Wish you and all our blogger friends (and family) a wonderful NEW YEAR !

Thanks to the readers who have put "+" for this posting to ensure more people read this :)))

said...

test ...

said...

நல்ல முயற்சி பாலா.. குழந்தை லோகப்ரியா சீக்கிரம் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்..

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

மீண்டும் ஒரு நல்ல முயற்சி....

ரவி said...

I will mail you regarding this matter and I can give you a good amount for logapriya fund.

enRenRum-anbudan.BALA said...

Usha, பொன்ஸ், செந்தில் குமரன், செந்தழல் ரவி,

நன்றி !

நாமக்கல் சிபி said...

தேவையான அளவு பணம் சேர்ந்து குழந்தை குணமடைய வேண்டி கொள்கிறேன்...

மற்றவை தனி மடலில்...

ச.சங்கர் said...

அனைத்து வலைப்பதிவு நண்பர்களுக்கும் (இரு பாலருக்கும்) நெஞ்சார்ந்த நன்றிகள் பல

அன்புடன்...ச.சங்கர்

said...

+

enRenRum-anbudan.BALA said...

Vetti,

OK ! I will wait for your email.

Anony,

Thanks for the "+" :)

Hariharan # 03985177737685368452 said...

தனிமடலில் எனது பங்களிப்பு விபரம்.

இன்னொருமுறை உதவ சந்தர்ப்பம் தந்ததற்கு மிக்க நன்றிகள் எஅபாலா!

குழந்தையின் பூரணநலத்திற்கும், நீண்ட ஆரோக்கியமான ஆயுளுக்கும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

enRenRum-anbudan.BALA said...

Dear Hariharan,

Thanks !

enRenRum-anbudan.BALA said...

Test !!!

said...

என் பங்குக்கு ஒரு பி. க. :)

சேதுக்கரசி said...

//என் பங்குக்கு ஒரு பி. க. :)//

என் பங்குக்கும்.

said...

ஹெரிடிடரி என்றும் விளக்கவில்லை...

பாலா,
நான் அறிந்தவரை,
ஹெரிடரி-யும் ஒரு காரணம் - ஆனால் அது மட்டுமேயல்ல. அதுபோக, முதல் குழந்தைக்கு அந்த குறையிருந்தால் - அடுத்தகுழந்தைக்கும் அப்படி(த்தான்) இருக்கும் என்றும் உறுதிசொல்ல முடியாது. பெரும்பாலும் பிறந்தகுழந்தைக்கு (குறிப்பாக தாய்/தந்தையர் சொந்தத்தில் திருமணம் செய்திருக்கும்பட்சத்தில்) 2D Echo Scan இங்கெல்லாம் எடுத்துப் பார்க்கிறார்கள். ஆனால் அது தெரியாதபட்சத்தில் - சில குழந்தைகளுக்கு தானாகவே சரியாகிவிடுமாம். ஒரு சிலர் பல வருடங்களுக்கு இதயக்குறை எந்த பிரச்னையும் கொடுக்காமல் கூட இருப்பதுண்டு!
லோகப்ரியாவும் விரைவில் சிகிச்சைபெற்று குணமாக பிரார்த்தனைகளும், வேண்டுதலும்.

மேல்விபரம் இருந்தால் இங்கு நண்பர்களுக்கு தெரிவிக்கவும்.

சேதுக்கரசி said...

பாலா, நீங்களோ அல்லது வேறு யாருமோ... இணையம் மூலமாக நன்கொடை பெற்றுக்கொள்ளும் அமைப்புகள் தெரிந்தால் சொல்லுங்கள் என்று எழுதியிருந்த ஞாபகம் (கடந்த ஒரு வாரத்துக்குள்) யாரென்று நினைவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் :-)

இதோ ஒரு தோழி மூலம் எனக்குக் கிடைத்த தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொள்கிறேன்:

அன்புடன் அமைதிப்படை அன்பர் உமா (ரமணா) அனுப்பியது:

இந்தியா டீம்
http://www.indiateam.org

குழந்தைகளின் கல்விக்காக உழைக்கும் அமைப்பு. நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த அமைப்பைப் பற்றிய தகவல்களும் நன்கொடைப் பக்கமும் தளத்திலேயே உள்ளன.

enRenRum-anbudan.BALA said...

Dear Anbu,

Thanks !

//மேல்விபரம் இருந்தால் இங்கு நண்பர்களுக்கு தெரிவிக்கவும்.
//
Soon I will update all of you.

சேதுக்கரசி,

Thank you very much for the info. I will check this !

enRenRum-anbudan.BALA said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

அன்பு நண்பர்களே,

நானும், சங்கரும் இன்று ராமச்சந்திரா மருத்துவமனை சென்று, திரு. ஸ்ரீகுமார் (GM, Admin) அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அறுவை சிகிச்சைக்கான தொகைக்கான காசோலைகளை அவரிடம் சேர்ப்பித்தோம்.

குழந்தை லோகபிரியா கடந்த 3 நாட்களாகவே (சற்று கபம் இருந்ததால்) மருத்துவமனையில் தான் இருக்கிறாள். இப்போது பரவாயில்லை. மருத்துவர் ரஞ்சித்திடம் பேசினோம். அறுவை சிகிச்சைக்கான தேதி 18 ஜனவரி 2007.

லோகபிரியா சிகிச்சை ஆகி, நல்லபடியாக குணமடைய பிரார்த்திப்போம். மற்ற விவரங்களை தனிப் பதிவில் பின்னர் தருகிறேன்.

உதவிய நண்பர்களுக்கு நன்றி.

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

அன்பு நண்பர்களே,

நானும், சங்கரும் இன்று ராமச்சந்திரா மருத்துவமனை சென்று, திரு. ஸ்ரீகுமார் (GM, Admin) அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அறுவை சிகிச்சைக்கான தொகைக்கான காசோலைகளை அவரிடம் சேர்ப்பித்தோம்.

குழந்தை லோகபிரியா கடந்த 3 நாட்களாகவே (சற்று கபம் இருந்ததால்) மருத்துவமனையில் தான் இருக்கிறாள். இப்போது பரவாயில்லை. மருத்துவர் ரஞ்சித்திடம் பேசினோம். அறுவை சிகிச்சைக்கான தேதி 18 ஜனவரி 2007.

லோகபிரியா சிகிச்சை ஆகி, நல்லபடியாக குணமடைய பிரார்த்திப்போம். மற்ற விவரங்களை தனிப் பதிவில் பின்னர் தருகிறேன்.

உதவிய நண்பர்களுக்கு நன்றி.

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

நண்பர்களே,

இன்று குழந்தை லோகபிரியாவின் அறுவை சிகிச்சை நல்ல விதமாக நடந்து முடிந்தது. குழந்தை நலம் பெற பிரார்த்திப்போம் ! மற்றவை, நான் இடப்போகும் பதிவில் விவரமாகச் சொல்கிறேன்.

அனைவருக்கும் நன்றி.

எ.அ.பாலா

சேதுக்கரசி said...

நிலவு நண்பன் வலைப்பூவில் இந்தக் கோரிக்கையைப் பாருங்கள்:
கொடுங்கள் கொடுக்கப்படும்

எனக்குத் தெரிந்தவரும் நிலவு நண்பனின் நெருங்கிய நண்பருமான செய்யதலிக்குத் தெரிந்தவர் ஒருவருக்கு உதவி தேவைப்படுகிறது. இயன்றவர்கள் உதவுங்கள். நன்றி.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails